ViennaOpen: வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் இத்தாலியைச் சேர்ந்த பெரெட்டினி, ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெரெட்டினி 6-3 என்ற கணக்கில் தீமிடமிருந்து கைப்பற்றினார். அதன்பின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம், இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி பெரெட்டினிக்கு அதிர்ச்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் டொமினிக் தீம் மீண்டும் தனது திறமையைக் காட்டினார். இதனால் தீம் முன்றாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
-
Thiem DREAM! 😇@ThiemDomi rallies from a set down to defeat Matteo Berrettini 3-6 7-5 6-3 to reach #ErsteBankOpen final. pic.twitter.com/jIWr1FFZyH
— Tennis TV (@TennisTV) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thiem DREAM! 😇@ThiemDomi rallies from a set down to defeat Matteo Berrettini 3-6 7-5 6-3 to reach #ErsteBankOpen final. pic.twitter.com/jIWr1FFZyH
— Tennis TV (@TennisTV) October 26, 2019Thiem DREAM! 😇@ThiemDomi rallies from a set down to defeat Matteo Berrettini 3-6 7-5 6-3 to reach #ErsteBankOpen final. pic.twitter.com/jIWr1FFZyH
— Tennis TV (@TennisTV) October 26, 2019
இதன் மூலம் டொமினிக் தீம் 3-6, 7-5, 6-3 என்ற கணக்கில் இத்தாலியின் பெரெட்டினியை வீழ்த்தி வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இன்று நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: ரோஜர் ஃபெடரரின் ஆக்ரோஷத்தில் வீழ்ந்த சிட்சிபாஸ்!