இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே வருகிற நவம்பர் 19ஆம் தேதி டேவிஸ் கோப்பை டை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டை ஆட்டத்தில் இருந்து இளம் வீரர் சசி குமார் முகுந்த் நேற்று வெளியேறினார். ரிசர்வ் உறுப்பினராக பெயரிடப்பட்ட முகுந்த், போர்ச்சுகலில் நடந்த போட்டியில் விளையாடும்போது காயம் அடைந்தார்.
இது குறித்து இந்தியாவின் டேவிஸ் கோப்பை பயிற்சியாளர் ஜீஷன் அலி கூறுகையில், "போர்ச்சுகல் நாட்டில் நடந்தப் போட்டியில் விளையாடிய போது சசிகுமார் முகுந்த் காயம் அடைந்ததால் எதிர்பாராதவிதமாக அவர் இந்திய அணியினருடன் இணைந்து பயணிக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகன் போபண்ணா தோள் பட்டை காயம் காரணமாக, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து விலகினார். தற்போது சசிகுமார் முகுந்தும் காயம் காரணமாக விலகியுள்ளதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தந்தை மரணத்தினால் தொடரிலிருந்து விலகிய அகுட்!