இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் முகமாக அறியப்பட்டு வந்தார். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்-ஐ திருமணம் செய்தபின், ஆண் குழந்தைக்கு தாயானார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சானியா மிர்சா பேசுகையில், மும்பையில் நடைபெறவுள்ள ஐடிஎஃப் (ITF) தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். ஆனால் உறுதியாக பங்கேற்பது குறித்து முடிவு செய்யவில்லை. ஆனால் ஹாபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நிச்சயம் பங்கேற்பேன்.
குழந்தைபேறுக்கு பிறகு எனது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. எனது அன்றாட நடவடிக்கைகள், தூங்கும் நேரம் என அனைத்தும் மாறியது. ஆனால் தற்போது எனது உடல் குழந்தைபேறுக்கு முன் எவ்வாறு இருந்ததோ, அதே நிலைக்கு மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சா கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'என் வாழ்வில் மறக்க முடியாத இரண்டு நிகழ்வுகள் அது' : மனம் திறந்த தல தோனி!