RolexParisMasters: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சு தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகின் முன்னணி நட்சத்திர டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இத்தொடரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘இத்தொடரிலிருந்து வெளியேறுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. நான் ஏடிபி சுற்றுப்பயணத்தில் முடிந்த வரை வேகமாக விளையாட விரும்புவதால் இத்தொடரிலிருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தொடரிலிருந்து விலகியாதால் என்னுடைய பிரெஞ்சு ரசிகர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கூறியுள்ளார்.
-
.@rogerfederer, the No.3 seed, has withdrawn from the 2019 Rolex Paris Masters. #RolexParisMasters pic.twitter.com/bdRBRQ6JxI
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@rogerfederer, the No.3 seed, has withdrawn from the 2019 Rolex Paris Masters. #RolexParisMasters pic.twitter.com/bdRBRQ6JxI
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) October 28, 2019.@rogerfederer, the No.3 seed, has withdrawn from the 2019 Rolex Paris Masters. #RolexParisMasters pic.twitter.com/bdRBRQ6JxI
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) October 28, 2019
38 வயதான ரோஜர் ஃபெடரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேசல் டென்னிஸ் தொடரில் தனது 10ஆவது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #SwissIndoorsBasel: பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஃபெடரர்!