ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் நேற்று (ஜூன் 6) நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரர், ஜெர்மனியின் டோமினிக் கோப்ஃபர் ஆகியோர் விளையாடினர்.
இதில் முதல் செட்டில் கடுமையாகப் போராடிய பெடரர் 7-6 (5) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். எனினும் அடுத்த செட்டை 6-7 (3) என்ற செட் கணக்கில் டோமினிக் கைப்பற்றினார்.
இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. நடைபெற்று முடிந்த மூன்றாவது செட்டை 7-6 (4) என்ற புள்ளிக் கணக்கில் பெடரர் கைப்பற்றினார். அதன்பின்னர் நடைபெற்ற நான்காவது செட்டில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் டோமினிக்கை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு ரோஜர் பெடரர் தகுதிபெற்றார்.
இந்நிலையில் காயம் காரணமாக ஓய்வுபெற வேண்டி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். காலிறுதிக்கு முந்தைய போட்டியில் மேட்டியோ பெர்ரட்டினியுடன் விளையாட இருந்த நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என்னுடைய அணியினருடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னர், பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகும் முடிவை நான் எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கேஷுவலாக ஷார்ட்ஸ் அணிந்து செய்தி வாசித்த தொகுப்பாளர்!