2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆறுமுறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பிய வீரர் ஃபிலிப் கிரஜினோவிக்குடன் ( Filip Krajinovic) பலப்பரீட்சை நடத்தினார்.
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர் 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் ஃபெடடர் வெல்லும் 99ஆவது வெற்றி இதுவாகும். இப்போட்டி 92 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாம் சுற்று போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் மில்மேனுடன் மோதவுள்ளார்.
-
2️⃣1️⃣ / 2️⃣1️⃣@rogerfederer maintains his peRFect record of having always reached the third round at the #AusOpen, def. Filip Krajinovic 6-1 6-4 6-1.#AO2020 pic.twitter.com/852qUhDFUr
— #AusOpen (@AustralianOpen) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2️⃣1️⃣ / 2️⃣1️⃣@rogerfederer maintains his peRFect record of having always reached the third round at the #AusOpen, def. Filip Krajinovic 6-1 6-4 6-1.#AO2020 pic.twitter.com/852qUhDFUr
— #AusOpen (@AustralianOpen) January 22, 20202️⃣1️⃣ / 2️⃣1️⃣@rogerfederer maintains his peRFect record of having always reached the third round at the #AusOpen, def. Filip Krajinovic 6-1 6-4 6-1.#AO2020 pic.twitter.com/852qUhDFUr
— #AusOpen (@AustralianOpen) January 22, 2020
இப்போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையர் பிரிவில் 100 வெற்றிகளை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அவர், விம்பிள்டனில் 101 வெற்றிகள் பெற்றுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ரோஜர் ஃபெடரர் ஒயின் போன்றவர்... இனிதான் ஆட்டம் இருக்கு