இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆடவருக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ’ஆண்டர் அகாஸ்’ குரூப்பில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினின் நட்சத்திர வீரரான ரபேல் நடால், ரஷ்யாவின் டெனில் மெத்வதேவ்வை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மெத்வதேவ் 7-6 என கைப்பற்றி நடாலிற்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இரண்டு வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இம்முறையும் ஆட்டம் டை-ப்ரேக்கர் வரை சென்றது. அதில் சிறப்பாக விளையாடிய நடால் 7-6 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றினார்.
இதன் மூலம் ரபேல் நடால் 6-7, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் மெத்வதேவ்வை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரிய வீரர்