ETV Bharat / sports

கத்தார் ஓபன்: அரையிறுதிச்சுற்றில் சானியா இணை! - கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்று போட்டிக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா, ஆண்ட்ரேஜா க்ளெபாஸ் இணை முன்னேறிவுள்ளது.

Qatar Tata Open: Sania Mirza, Andreja Klepac progress to semi-final

author img

By

Published : Mar 4, 2021, 3:18 AM IST

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (மார்ச் 3) நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா க்ளெபாஸ் இணை - ரஷ்யாவின் அண்ணா பிளிங்கோவா, கனடாவின் கேப்ரியல் டப்ரோவ்ஸ்கி இணையுடன் மோதியது.

பரபரப்பான இப்போட்டின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா மிர்ஸா இணை முதல் செட்டை 6- 2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா மிர்ஸா இணை இரண்டாவது செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி பிளிங்கோவா இணைக்கு அதிர்ச்சியளித்தது.

இதன் மூலம் சானியா மிர்ஸா இணை 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிளிங்கோவா இணையை வீழ்த்தி கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கபில் தேவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.