கரோனா வைரஸ் காரணமாக உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வந்தனர்.
மேலும் வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே தனியார் விளையாட்டு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த பலமுறை கிறிஸ் எவர்ட், டென்னிஸ் போட்டிகள் மீண்டும் தொடங்குவது குறித்தும், அதற்காக விளையாட்டு வீரர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 'நீண்ட காலமாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் நடைபெறாமல் இருப்பதால் அப்போட்டி மீண்டும் தொடங்கும் சமயத்தில் விளையாட்டு வீரர்கள் அதில் மூழ்கி விடுவார்கள்.
குறிப்பாக டென்னிசில் செரீனா, ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர் ஆகியோர் நிச்சயம் அதனை செய்வார்கள் என நினைக்கிறேன்.
இத்தனை நாள்கள் அவர்கள், தங்கள் குடும்பத்தினருடனும், தங்களது உடற்பயிற்சிகளிலும் நேரத்தை செலவிட்டு வந்தனர். ஆனால் தற்போது கட்டாயம் அவர்கள் தங்களது விளையாட்டுக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மீண்டும் காலத்திற்கு வந்து விளையாடுவதை காண நான் ஆவலுடன் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.