இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி, இஸ்லாமாபாத்தில் வருகிற 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடப்பதாக இருந்தது.
ஆனால், இரு நாடுகள் இடையே ஏற்கெனவே பல்வேறு அரசியல் பிரச்னைகள் இருப்பதால், இந்த போட்டியைப் பாகிஸ்தானிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றி, பொதுவான இடத்தில் வைக்குமாறு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தை அகில இந்திய டென்னிஸ் சங்கம் கேட்டுக்கொண்டது.
இந்தியாவின் இந்த கோரிக்கையை சர்வதேச டென்னிஸ் சங்கம் (ஐடிஎஃப்) ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
-
The ITF has issued the following statement regarding the Davis Cup Asia/Oceania Group I tie between Pakistan and India: pic.twitter.com/Jwj2ZRWMZo
— ITF Media (@ITFMedia) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The ITF has issued the following statement regarding the Davis Cup Asia/Oceania Group I tie between Pakistan and India: pic.twitter.com/Jwj2ZRWMZo
— ITF Media (@ITFMedia) November 4, 2019The ITF has issued the following statement regarding the Davis Cup Asia/Oceania Group I tie between Pakistan and India: pic.twitter.com/Jwj2ZRWMZo
— ITF Media (@ITFMedia) November 4, 2019
மேலும் இந்தியாவின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும், டேவிஸ் கோப்பை இஸ்லாமாபாத்தில் தான் நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு ஐடிஎஃப்விடம் மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால் ஐடிஎப் பாகிஸ்தானின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
அதேபோல், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியானது நவம்பர் 29,30 ஆம் தேதிகளில் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெறும் என ஐடிஎஃப் இன்று அறிவித்துள்ளது. ஐடிஎஃப்பின் இந்த அறிவிப்பால் இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு, தற்போது நிம்மதி பெரு மூச்சடைந்துள்ளது.
மேலும் இந்திய அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா காயம் காரணமாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிஸ் கோப்பை இந்திய அணி: சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், சசி குமார் முகுந்த், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா, லியாண்டர் பயேஸ், ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் சித்தார்த் ராவத்.
இதையும் படிங்க: ஏடிபி பைனல்ஸ்: இளம் வயதில் கோப்பையை கைப்பற்றி அசத்திய சிட்சிபாஸ்!