கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கான போட்டியில் ரஷ்யாவின் நட்சத்திர வீரர் லூக்கா டேனில் மெட்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கொய்பெரை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் கொய்பெர் முதல் செட் கணக்கை 6-3 என்ற புள்ளிகளில் மெட்வதேவை வீழ்த்தினார். அதன் பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெட்வதேவ் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கொய்பெரிடமிருந்து கைப்பற்றினார்.
-
Man on a mission!
— US Open Tennis (@usopen) September 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Daniil Medvedev continues his red hot summer, defeating Koepfer 3-6, 6-3, 6-2, 7-6(2) in R4 of the #USOpen.
Match report ➡ https://t.co/sMvi28mvjM pic.twitter.com/mnttcZJ1Oh
">Man on a mission!
— US Open Tennis (@usopen) September 2, 2019
Daniil Medvedev continues his red hot summer, defeating Koepfer 3-6, 6-3, 6-2, 7-6(2) in R4 of the #USOpen.
Match report ➡ https://t.co/sMvi28mvjM pic.twitter.com/mnttcZJ1OhMan on a mission!
— US Open Tennis (@usopen) September 2, 2019
Daniil Medvedev continues his red hot summer, defeating Koepfer 3-6, 6-3, 6-2, 7-6(2) in R4 of the #USOpen.
Match report ➡ https://t.co/sMvi28mvjM pic.twitter.com/mnttcZJ1Oh
அதன் பின் அடுத்தடுத்து இரண்டு செட்கணக்குகளையும் டேனில் மெட்வதேவ் 6-2, 7-6 என்ற கணக்குகளில் டொமினிக் கொய்பெரை வீழ்த்தினார்.
இதன் மூலம் யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் 3-6, 6-3, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டொமினிக் கொய்பெரை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றில் சுவிச்சர்லாந்தின் நட்சத்திர வீரரான ஸ்டான் வௌரிங்காவை எதிர்கொள்கிறார் உலகின் ஐந்தாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ்.