டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று(அக்.01) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், லிதுவேனியாவின் ரிசார்டாஸ் பெரான்கிஸ் எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பான இப்போட்டியில் ஜோகோவிச், 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெரான்கிஸை வீழ்த்தி, பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், தொடர்ந்து 15ஆவது முறையாக மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
இப்போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றதன் மூலம் பிரஞ்சு ஓபன் தொடரில் அதிக வெற்றியைப் பெற்ற (70 வெற்றிகள்) இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இச்சாதனையை ஜோகோவிச் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரருடன் பகிர்ந்துள்ளார். இப்பட்டியலில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், 95 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: மும்பை vs பஞ்சாப்; ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்!