2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலை எதிர்த்து அமெரிக்காவின் ஃபிரான்சிஸ் டியாஃபோ விளையாடினார்.
களிமண் ஆடுகளங்கள் தொடர்களான மான்டி கார்லோ, பார்சிலோனா ஓபன் என தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் அரையிறுதியோடு வெளியேரிய நடால், இந்த தொடரில் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என மிகவும் கவனமாக ஆடி வருகிறார்.
இந்நிலையில், இந்த போட்டியின் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட நடால், 6-3, 6-4 என அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடாலை எதிர்த்து சுவிட்சர்லாந்த் வீரர் வாவ்ரிங்கா ஆடவுள்ளார்.