கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரபல டென்னிஸ் தொடரான இத்தாலியன் ஓபன் தொடர் அந்நட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஜெர்மனியின் டொமினிக் கோய்பெரை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டியில் டொமினிக் சிறப்பாக விளையாடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.
வெற்றியை தீர்மானிக்கும் இறுதிச் செட்டில் தனது திறனை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் நோவாக் ஜோகோவிச் 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் கோய்ரை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
-
Make that 1️⃣1️⃣ @InteBNLdItalia SFs for @DjokerNole!
— ATP Tour (@atptour) September 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
He'll take on Casper Ruud for a place in the final. pic.twitter.com/kzTusIvgoL
">Make that 1️⃣1️⃣ @InteBNLdItalia SFs for @DjokerNole!
— ATP Tour (@atptour) September 19, 2020
He'll take on Casper Ruud for a place in the final. pic.twitter.com/kzTusIvgoLMake that 1️⃣1️⃣ @InteBNLdItalia SFs for @DjokerNole!
— ATP Tour (@atptour) September 19, 2020
He'll take on Casper Ruud for a place in the final. pic.twitter.com/kzTusIvgoL
முன்னதாக நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டத்தின்போது போட்டி நடுவரை ஜோகோவிச் தாக்கியதாக, அவர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச முடிவு!