கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடர் நியூயார்க்கில் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரருடன் பலப்பரீட்சை செய்யவுள்ளார்.
25 வயதான சுமித் நாகல் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். முதல் சுற்றிலேயே டென்னிஸ் ஜாம்பவான் ஃபெடரருடன் மோதவுள்ளதால், அவருக்கு இப்போட்டி நிச்சயம் கடும் சவலாக இருக்கும். அதேநேரத்தில் மறக்க முடியாத தருணமாகவும் இருக்கும். இவ்விரு வீரர்களுக்கு இடையிலான இப்போட்டி 27ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.