ETV Bharat / sports

பெல்லி ஜீன் கிங் கோப்பை - ஒற்றையர் பிரிவில் இரு போட்டிகளிலும் இந்தியா தோல்வி - அங்கிதா ரெய்னா

லாட்வியா வீராங்கனை ஜெலினா ஒஸ்தபென்கோவின் ஆட்டத்துக்கு ஏற்பவாறு ஈடுகொடுக்கும் விதமாக தொடக்கத்திலேயே விளையாட தவறியதால் தோல்வியை தழுவ நேரிட்டது என்று சர்வதேச மகளிருக்கான பெல்லி ஜீன் கிங் கோப்பை தொடரில் தோல்வியடைந்தது குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா கூறியுள்ளார்.

Ankita Raina
இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா
author img

By

Published : Apr 18, 2021, 4:36 PM IST

ஜூர்மாலா: லாட்வியா வீராங்கனைக்களுக்கு எதிராக பெல்லி ஜீன் கிங் கோப்பை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த அங்கிதா ரெய்னா, கர்மன் கெளர் தன்டி என இருவரும் தோல்வியைத் தழுவினர்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் லாட்வியா வீராங்கனைகளான ஜெலினா ஒஸ்தபென்கோ, அனஸ்டாசிஜா செவஸ்டோவா ஆகியோரிடம் இந்தியா வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா, கர்மன் கெளர் ஆகியோர் தோல்வியுற்றனர்.

ஒஸ்தபென்கோவுக்கு எதிரான போட்டியில் 2-6,7-5, 5-7 என செட் கணக்கில் தோல்வியடைந்தார் அங்கிதா ரெய்னா. இதுகுறித்து அவர் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

முதல் செட் ஆட்டத்தின்போது ஒஸ்தபென்கோ ஆட்டத்தை நன்கு கணித்துவிட்டேன். ஆனால் அதற்கு ஏற்றவாறு எனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் தவறு செய்தேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அங்கிதா ரெய்னா, நாட்டுக்காக விளையாடும்போது ஒவ்வொரு புள்ளிகளையும் முக்கியமான கருத வேண்டும். முதல் செட் ஆட்டத்தில் நான் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அங்கே விட்டதை அடுத்த செட்டில் பிடிக்க முடியவில்லை.

ஒஸ்தபென்கோவும் சிறப்பாக விளையாடினார். எனது ஆட்டத்தில் கொஞ்சம் முன்னேற்றத்தை கண்டுள்ளேன். போட்டியில் களமிறங்கிய பின்னர் என்னவேனாலும் நடக்கலாம் என்பதால் முடிவை பற்றி பெரிதாக யோசித்துக்கொள்ள மாட்டேன்.

அடுத்த போட்டியில் ரிவர்ஸ் சிங்கிள் முறைப்படி மற்றொரு லாத்வியா வீராங்கனையான அனஸ்டாசிஜா செவஸ்டோவா எதிர்கொள்ளவுள்ளார் அங்கிதா ரெய்னா.

இதேபோல் செவஸ்டோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-6,0-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது பற்றி கர்மன் கெளர் கூறியதாவது:

முதல் முறையாக டாப் 50 இடத்தில் இருக்கும் வீராங்கனையுடன் மோடியதில் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்து இதுபோன்ற தொடரில் ஆடுவதால் உடற் தகுதியில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன்.

முதல் செட்டில் கடுமையான போட்டி அமைந்தது. ஆனால் இரண்டாவது செட்டில் ஆட்டத்தின் மீதான எனது தீவிரம் குறைந்துவிட்டது என்றார்.

இதையும் படிங்க: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற ரவி, காயத்தால் பூனியா விலகல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.