கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டென்னிஸ் விளையாட்டின் முக்கிய தொடர்களான விம்பிள்டன் தொடர், பிரஞ்சு ஓபன் தொடர் உள்ளிட்டவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செர்பிய தடகள வீரர்களுடனான ஃபேஸ்புக் நேரலையின் போது, தனிப்பட்ட முறையில் கரோனா பெருந்தொற்றிற்கு தடுப்பூசிகள் பயன்படுத்துவதை எதிர்ப்பதாக டென்னிஸ் விளையாட்டின் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தனிப்பட்ட முறையில் நான் தடுப்பூசிகளை பயன்படுத்துவதை எதிர்க்கிறேன். வாழவேண்டும் என்பதற்காக ஒருவரை கட்டாயப்படுத்தி தடுப்பூசிகளை பயன்படுத்த சொல்வதை நான் விரும்பவில்லை. ஆனால் ஒருவேளை அது கட்டாயமாகிவிட்டால், என்ன நடக்கும்? நான் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுகுறித்து எனக்கு சொந்த எண்ணங்கள் உள்ளன, அவை ஒரு கட்டத்தில் மாறுமா என்பது எனக்குத் தெரியாது", என்றார்.
முன்னதாக, உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களிடன் நன்கொடை பெற்று தரவரிசைப் பட்டியலில் கடைநிலையில் உள்ள வீரர்களுக்கு உதவும் முயற்சியை நடால், ஃபெடரருடன் இணைந்து ஜோகோவிச் மேற்கோண்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜாம்பவானை முடி திருத்துபவராக மாற்றிய கரோனா!