டென்னிஸ் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தொடங்கியுள்ளது. களிமண் தரை ஆடுகளங்களில் பாரம்பரியமாக ஆடப்பட்டுவரும் இந்த தொடருக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்து முதல் சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து இத்தாலியின் லாரென்சோ (lorenzo) ஆடினார். இதில் முதல் செட்டை 6-2 என அதிரடியாகக் கைப்பற்றிய ஃபெடரர், இரண்டாம் செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது சுற்றில் 6-4 எனக் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர் சிட்சிபஸை எதிர்த்து ஜெர்மன் வீரர் (martrer) மார்ட்டரர் ஆடினார். அதில் 6-2, 6-2, 7-6 எனக் கைப்பற்றிய சிட்சிபஸ் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மேலும் இதனையடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவை (dimitrov) எதிர்த்து செர்பியாவின் ஜான்கோ (janko) ஆடினார். அதில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-0 என டிமிட்ரோவ் கைப்பற்ற, மூன்றாவது செட்டை 6-3 என ஜான்கோ கைப்பற்றி டிமிட்ரோவிற்கு ஆச்சரியமளித்தார். இதனையடுத்து நடைபெற்ற நான்காவது செட்டையும் 7-6 என ஜான்கோ கைப்பற்ற ஆட்டம் பரபரப்பாகியது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும், ஐந்தாவது செட்டை 6-4 என டிமிட்ரோவ் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.