சுவிஸ் இன்டோர்ஸ் பேஸல் தொடர் சுவிட்சர்லாந்தின் பேஸல் (Basel) நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி போட்டியில் உள்ளூர் வீரரான ரோஜர் ஃபெடரரை எதிர்த்து கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆடினார்.
இதற்கு முன்னதாக நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை இளம் வீரர் சிட்சிபாஸ் வீழ்த்தியதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஃபெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றிய ஃபெடரர், நேர் செட்களில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் சுவிஸ் இன்டோர்ஸ் பேஸல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக 13ஆவது முறையாகவும், மொத்தமாக 15ஆவது முறையாகவும் முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் ஆடவுள்ளார்.
இதையும் படிங்க: வயசானாலும் ஸ்டைல் குறையாத நடால்...