மியாமி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபுளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றில், சுவிட்ஸர்லாந்து நாட்டின் நட்சத்திர வீரர் ஃபெடரர், செர்பியாவின் ஃபிலிப் கிரான்ஜினோவிக்கை (Filip Krajinovic) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஃபெடரர் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கிரான்ஜினோவிக்கை எளிதில் வீழ்த்தி, நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நான்காம் சுற்றுப் போட்டியில் அவர் ரஷியாவின் டேனில் மேட்வெடேவுடன் (Daniil Medvedev) மோதவுள்ளார்.
இதேபோல் நடைபெற்ற, மற்றொரு ஆட்டத்தில், கிரீக் வீரர் ஸ்டீஃபன் ஸிட்ஸிபாஸ், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் லியோநார்டோ மேயரை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.