மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கனடா நாட்டின் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் அதிரடியாக விளையாடி முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஷபோவாலோவுக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் ஜோகோவிச் தனது திறமையான ஆட்டத்தினால் 6-4 என கைப்பற்றினார்.
இதன் மூலம் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் ஷபோவாலோவை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
-
2009 l 2013 l 2014 l 2015 l 2019
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) November 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Les 5 fantastiques 🏆 de @DjokerNole à P🗼RIS#RolexParisMasters pic.twitter.com/6VenG3ggB6
">2009 l 2013 l 2014 l 2015 l 2019
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) November 3, 2019
Les 5 fantastiques 🏆 de @DjokerNole à P🗼RIS#RolexParisMasters pic.twitter.com/6VenG3ggB62009 l 2013 l 2014 l 2015 l 2019
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) November 3, 2019
Les 5 fantastiques 🏆 de @DjokerNole à P🗼RIS#RolexParisMasters pic.twitter.com/6VenG3ggB6
செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன் இவர் 2009 l 2013 l 2014 l 2015 ஆகிய வருடங்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜோகோவிச்சை வீழ்த்தணும்னா இத செய்யுங்க - டிப்ஸ் கொடுக்கும் நடால்!