ETV Bharat / sports

அஸ்தானா ஓபன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய திவிஜ் ஷரண் இணை! - அஸ்தானா ஓபன் 2020

அஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரண், இங்கிலாந்தின் லூக் பாம்ப்ரிட்ஜ் இணை வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Divij Sharan- Luke Bambridge pair in quarterfinals of Astana Open

author img

By

Published : Oct 28, 2020, 8:42 PM IST

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் அஸ்தானா ஓபன் 2020 டென்னிஸ் தொடர் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.28) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரண் - லூக் பாம்ப்ரிட்ஜ் இணை, உக்ரைனின் ஏரியல் பெஹர்-கோன்சலோ எஸ்கோபார் இணையுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை ஷரண் இணை 7-5 என்ற கணகில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் பெஹர் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஷரண் இணை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10-6 என்ற கணக்கில் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி பெஹர் இணைக்கு அதிர்ச்சியளித்தது.

இதன் மூலம் அஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்று ஆட்டத்தில் ஷரண் இணை 7-5, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் பெஹர் இணையை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க:பயிற்சிக்கு திரும்பிய ஹாக்கி வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.