ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றோடு நடையைக் கட்டிய ஷரண், அங்கிதா! - திவிஜ் ஷரண்

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று (பிப்.11) நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் திவிஜ் ஷரண், அங்கிதா ரெய்னா ஆகியோர முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.

Divij, Ankita bow out Australian Open doubles with respective partners

author img

By

Published : Feb 11, 2021, 4:40 PM IST

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரண், ஸ்லோவாக்கியாவின் இகோர் ஜெலனே இணை, ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ், யானிக் ஹான்ஃப்மேன் இணையை எதிர்த்து விளையாடியது.

பரபரப்பான இப்போட்டியில் கெவின் இணை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் திவிஜ் ஷரண் இணையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ரொமானியாவின் மிஹேலா புஜார்னெஸ்கு இணை, ஆஸ்திரேலியாவின் பெலிண்டா வூல்காக், ஒலிவியா கடெக்கி இணையை எதிர்கொண்டது.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெலிண்டா இணை 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அங்கிதா ரெய்னா இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றோடு திவிஜ் ஷரண், அங்கிதா ரெய்னா ஆகியோர் வெளியேறினர்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.