பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சு தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகொர் டிமிட்ரோவ், சிலியின் கிறிஸ்டியன் கரினை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் அதிரடியாக விளையாடி முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி கரினுக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் டிமிட்ரோவ் தனது திறமையான ஆட்டதினால் 7-5 என கைப்பற்றினார்.
இதன் மூலம் கிரிகோர் டிமிட்ரோவ் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கிறிஸ்டியன் கரினை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: #RolexParisMasters: மெத்வதேவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட சார்டி!