ETV Bharat / sports

டேவிஸ் கோப்பை வெற்றியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் - சுமித் நாகல்

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பெற்ற வெற்றியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Summit Nagal
Summit Nagal
author img

By

Published : Dec 1, 2019, 7:02 PM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய ஓசேனியா குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றிபெற்றதால், இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து, நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவுக்கான போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜீவன் நெடுஞ்செழியன் இணை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பாகிஸ்தானின் முகமது சோயிப் - ஹுபைஸ் ரஹ்மான் ஜோடியை தோற்கடித்தது. டேவிஸ்கோப்பை தொடரில் இரட்டையர் பிரிவில் பயஸ் வெல்லும் 44ஆவது வெற்றி இதுவாகும். இதன் மூலம், டேவிஸ்கோப்பையில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை லியாண்டர் பயஸ் படைத்துள்ளார். இதனால் இத்தாலியின் நிக்கோலா பீட்ரஞ்சலி (42 வெற்றி) சாதனை முறியடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், பாகிஸ்தானின் யூசுப் கீலலுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சுமித் நாகல் 6-1, 6-0 என்ற கணக்கில் யூசுப்பை வீழ்த்தினார்.

Summit Nagal
சுமித் நாகல் இன்ஸ்டாகிராம் பதிவு

இதன் மூலம், இந்தியா இப்போட்டியில் 4-0 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள டேவிஸ்கோப்பை உலகத் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 6, 7ஆம் தேதிகளில் இந்திய அணி உலகின் இரண்டாம் நிலை அணியான குரோஷியாவுடன் மோதவுள்ளது.

இதையடுத்து, சுமித் நாகல் இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் அர்ப்பணிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், இந்த ஒருவார காலத்தில் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 6 டாலர் தான் இருந்தது; கோலி இல்லை என்றால்? மனம் திறக்கும் சுமித் நகல்

Intro:Body:

Pakistan vs Australia, 2nd Test Day 3

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.