டோக்கியோ (ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை, ஒலிம்பிக் போட்டிகளைச் சார்ந்தவர்களில் 58 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை கோகோ கஃப் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இயலாது என்பதை மிகவும் வருத்தத்துடன் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
-
🙏🏾❤️🤍💙 pic.twitter.com/lT0LoEV3eO
— Coco Gauff (@CocoGauff) July 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🙏🏾❤️🤍💙 pic.twitter.com/lT0LoEV3eO
— Coco Gauff (@CocoGauff) July 18, 2021🙏🏾❤️🤍💙 pic.twitter.com/lT0LoEV3eO
— Coco Gauff (@CocoGauff) July 18, 2021
ஒலிம்பிக்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது எனது நீண்டக்கால கனவு. வருங்காலத்தில் இந்த கனவு நிறைவேற வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு, கோகோ கஃப் விலகலுக்கு கவலை தெரிவித்துள்ளது. 17 வயதான கோகோ கஃப் உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 25ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: இதுவரை 58 பேருக்கு கரோனா தொற்று