ETV Bharat / sports

கண்கலங்கிய கோரி காஃப்... ஆறுதல் கூறிய நவோமி! - Naomi Osaka Class Act

நியூயார்க்: யுஎஸ் ஓபன் தொடரில்  15 வயது இளம் வீராங்கனை கோரி காஃபை வீழ்த்தியபின், நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா அவருக்கு ஆறுதல் கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Naomi Osaka
author img

By

Published : Sep 1, 2019, 10:30 PM IST

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா, அமெரிக்காவின் கோரி காஃப்பை எதிர்கொண்டார்.

இதில், சிறப்பாக விளையாடிய நவோமி ஒசாகா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று, நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் கண் கலங்கிய கோரி காஃப்பிற்கு நவோமி ஒசாகா ஆறுதல் வழங்கினார்.

Naomi Osaka

பின்னர், இருவரும் சேர்ந்து களத்தில் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நவோமி, கோரி இளம் வயதிலிருந்தே சிறப்பாக விளையாடி வருவதாகவும், அவருக்காக நீங்கள் நல்ல ஆதரவு தருவதாகவும் பேசினார். விட்டுகொடுக்கமால் நவோமி ஒசாகாவின் இந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் வீடியோ சமூகவலைதளங்கில் வைரலாகிவருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.