2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், சிலியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நிக்கோலஸ் ஜார்ரி ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் ஊக்க மருந்து தடுப்புப் பிரிவினர், நிக்கோலஸ் தனது தசை பகுதிகளை வலிமைப்படுத்துவதற்காக லிகாண்ட்ரோல் மற்றும் அனபோலிக் ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியதை உறுதிப்படுத்தினர். மேலும் இது குறித்து நிக்கோலஸை பதிலளிக்கும்படி உத்தவிட்டிருந்தனர்.
இது குறித்து நிக்கோலஸ் கூறுகையில், தனது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் மாத்திரைகளில் உள்ள பெருட்களைப் பற்றி அறியாமல் எடுத்துக்கொண்டதன் விளைவாகத்தான் இது நடைபெற்றது என்றார். நிக்கோலஸின் பதிலை ஏற்ற சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அவருக்கு 11 மாதம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
A decision has been issued under the Tennis Anti-Doping Programme in the case of Nicolas Jarry: https://t.co/Xc0M7PXzxA
— ITF Media (@ITFMedia) April 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A decision has been issued under the Tennis Anti-Doping Programme in the case of Nicolas Jarry: https://t.co/Xc0M7PXzxA
— ITF Media (@ITFMedia) April 20, 2020A decision has been issued under the Tennis Anti-Doping Programme in the case of Nicolas Jarry: https://t.co/Xc0M7PXzxA
— ITF Media (@ITFMedia) April 20, 2020
இதையடுத்து, நிக்கோலஸ் தனது ட்விட்டர் பதிவில், "ஆய்வின் முடிவில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தினேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் இதையறிந்தோ அல்லது வேண்டுமென்றோ செய்யவில்லை. நான் எடுத்துக்கொண்ட வைட்டமின் மாத்திரைகளில் ஊக்கமருந்து இருந்தது என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது வைட்டமின் மாத்திரைகளை முழுவதுமாக மாசுப்படுத்தி விட்டது. இருப்பினும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தடையை நான் முழுவதுமாக ஏற்கிறேன். மேலும் இவ்வழக்கு குறித்தான எனது மேல்முறையீட்டையும் திரும்பப் பெறுகிறேன்", என்று பதிவிட்டுள்ளார்.
- — Nicolas Jarry Fillol (@NicoJarry) April 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Nicolas Jarry Fillol (@NicoJarry) April 20, 2020
">— Nicolas Jarry Fillol (@NicoJarry) April 20, 2020
சிலியின் நட்சத்திர டென்னிஸ் வீரராக வலம் வரும் நிக்கோலஸ் ஜார்ரி, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா எதிரோலி: மொட்டை மாடியை டென்னிஸ் மைதானமாக மாற்றிய இளம்பெண்கள்!