ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்தக் காட்டுத்தீயை அணைப்பதற்குப் பல்வேறு தரப்பினரும் முயற்சிசெய்துவருகின்றனர்.
இந்நிலையில்ம், இந்தக் காட்டுத்தீயால் ஏற்படும் புகை, பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகை டாஸ்மானியா, விக்டோரியா, கான்பெர்ரா எனப் பல்வேறு பகுதிகளிலும் பரவிவருகிறது. இதனால் கிராண்ட்ஸ்லான் தொடர்களில் ஒன்றான, ஆஸ்திரேலிய டென்னிஸ் தொடர் தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் அலுவலர்கள் பேசுகையில், "நிச்சயம் ஆஸ்திரேலிய ஓபன் தொடர் குறிப்பிட்ட நாளில் தொடங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் காற்றின் தரத்தினைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். வீரர்கள், ஊழியர்களின் உடல்நலம் மிகவும் முக்கியம் என்பதால் நல்ல முடிவை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா காட்டுத் தீ: நிவாரணம் அளித்த டென்னிஸ் பிரபலங்கள்!