ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன், அந்நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (பிப்.10) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் பென் மெக்லாக்ளென் இணை தென் கொரியாவின் நாம் ஜி சுங், மின் கியூ சாங் இணையுடன் மோதியது.
இப்போட்டியின் முதல் செட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் கொரிய இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி போபண்ணா இணைக்கு அதிர்ச்சியளித்தது. பின்னர் இரண்டாம் செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா இணை, தோல்வியைத் தவிர்க்க போராடியது. இருப்பினும் 6-7 என்ற கணக்கில் போராடி இரண்டாவது செட்டையும் இழந்தது.
இதனால் தென்கொரிய இணை 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா, மெக்லாக்ளென் இணையை வீழ்த்தியது. இத்தோல்வியின் மூலம் போபண்ணா இணை ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து வெளியேறியது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றோடு நடையைக் கட்டிய நகல்