ஆடவர் வீரர்களுக்கான நடப்பு ஆண்டின் பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடர், பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் நிகு பூனச்சா, பிரபல செக் குடியரசை சேர்ந்த லூகஸ் ரோசலை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிகி பூனச்சா 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் லூகஸை வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 33 வயதான லூகஸ் ரோசல், 2012ஆம் ஆண்டில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நடாலை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியா - பாக். கிரிக்கெட் தொடர் நடக்க வேண்டும்': யுவராஜ் சிங் விருப்பம்