2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் - ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஆகியோருக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக நிக் கிர்ஜியோஸோடு மோதியபோது, அவர் நடந்துகொண்ட விதம்பற்றி நடால் கடுமையாக சாடியிருந்தார். அதையடுத்து விம்பிள்டன் ஓபன் தொடரில் மோதினாலும், நிக் கிர்ஜியோஸ் சொந்த மண்ணில் எவ்வாறு நடப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இன்று நடந்த இப்போட்டியின் தொடக்க செட்டில் சிறப்பாக ஆடிய நடால், 6-3 என ஆட்டத்தை எளிதாகக் கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது செட்டில் ஆக்ரோஷத்தோடு கவனமாக ஆடிய நிக் கிர்ஜியோஸ் 6-3 எனக் ஆட்டத்தை கைப்பற்றி தனது திறமையை நிரூபித்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
மூன்றாவது செட் ஆட்டத்தில் 4-4, 5-5 என சரிசமமாக போட்டியிட்டு 6-6 என்ற நிலைக்கு வந்தனர். இதையடுத்து டை ப்ரேக்கரில் 8-6 என்ற கணக்கில் வெற்றிபெற்று 7-6 (8-6) மூன்றாவது செட்டைக் கைப்பற்றினார். இந்த செட் ஆட்டம் ரசிகர்களிடையே பரபரப்பாக பார்க்கப்பட்டது.
பின்னர் நடந்த நான்காவது செட் ஆட்டத்தில் 6-6 என்ற நிலை மீண்டும் வர, மீண்டும் ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. அதில் 7-4 என நடால் வென்று, இறுதியாக நான்காவது செட்டினை 7-6 (7-4) என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.
ராக்கெட்டை உடைத்த கிர்ஜியோஸ்:
மூன்றாவது செட்டின் டை ப்ரேக்கரின் போது நடால் 3-1 என முன்னிலை பெற்றபோது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபமடைந்த கிர்ஜியோஸ் தனது டென்னிஸ் ராக்கெட்டை உடைத்தார்.
-
A running forehand like no other.@RafaelNadal | #AO2020 | #AusOpen pic.twitter.com/GlQHI5H1cx
— #AusOpen (@AustralianOpen) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A running forehand like no other.@RafaelNadal | #AO2020 | #AusOpen pic.twitter.com/GlQHI5H1cx
— #AusOpen (@AustralianOpen) January 27, 2020A running forehand like no other.@RafaelNadal | #AO2020 | #AusOpen pic.twitter.com/GlQHI5H1cx
— #AusOpen (@AustralianOpen) January 27, 2020
கிர்ஜியோஸைப் பாராட்டிய நடால்:
இந்த ஆட்டம் முடிந்து நடால் பேசுகையில், ’’கிர்ஜியோஸை எதிர்த்து ஆடும் போட்டி எப்போதும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அவருடைய டென்னிஸ் ஸ்டைலுக்கு நான் எதிரானவன் அல்ல. இதற்கு முன்னதாக கிர்ஜியோஸை நான் விமர்சித்ததற்கு காரணம், அவரின் சில நடவடிக்கைகள் குழந்தைகளுக்கும், டென்னிஸை பார்ப்பவர்களுகும் தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால் மட்டுமே. அவர் சரியான விஷயங்கள் செய்தால், அதனை ஆதரிக்கும் முதல் நபர் நானாகதான் இருப்பேன்.
-
"He's one of the highest talents that we have on our tour."
— #AusOpen (@AustralianOpen) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Respect from @RafaelNadal towards opponent @NickKyrgios 👊#AO2020 | #AusOpen pic.twitter.com/DxU4G16C18
">"He's one of the highest talents that we have on our tour."
— #AusOpen (@AustralianOpen) January 27, 2020
Respect from @RafaelNadal towards opponent @NickKyrgios 👊#AO2020 | #AusOpen pic.twitter.com/DxU4G16C18"He's one of the highest talents that we have on our tour."
— #AusOpen (@AustralianOpen) January 27, 2020
Respect from @RafaelNadal towards opponent @NickKyrgios 👊#AO2020 | #AusOpen pic.twitter.com/DxU4G16C18
இந்தத் தொடர் முழுவதிலும் கிர்ஜியோஸை நான் கவனித்துவந்தேன். ஒவ்வொரு ஆட்டத்தையும் சிறப்பாக ஆடினார். மிகவும் திறமையான வீரர்'' என நடால் பாராட்டினார்.
இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் பிடிச்சாலும் ஒரு நியாயம் வேணாமா? சஞ்சய் மஞ்ரேக்கர் - ஜடேஜா குசும்புகள்