சர்வதேச டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவிரிவு தரவரிசைப் பட்டியலில் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் உலகின் நட்சத்திர வீரர்களான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் இரண்டாம் இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மூன்றாவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டனர்.
அதே தருணம்,2016ஆம் ஆண்டு முதல்நிலை வீரராக இருந்த ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, காயம் காரணமாக பல தொடர்களில் பங்கேற்காததால் கடந்த டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 503ஆவது இடத்தைப் பிடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தரவரிசைப்பட்டியலில் 214 இடங்கள் முன்னேறி,289ஆவது இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: #CHELIV: முதலிடத்தில் லிவர்பூல்! 11ஆவது இடத்தில் செல்சீ!