ஐ.டி.எஃப். தாய்லாந்து மகளிர் டென்னிஸ் தொடர் ஜனவரி 29ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவை எதிர்த்து பிரெஞ்சு வீராங்கனை க்லோ பப்பட் ஆடினார்.
அதில் தொடக்கம் முதலே அபாரமாகச் செயல்பட்ட அங்கிதா ரெய்னா 6-3, 7-5 என அடுத்தடுத்து இரண்டு செட்களையும் வென்று அங்கிதா வென்றார். அங்கிதா ரெய்னா இந்த ஆண்டின் வெற்றிபெறும் முதல் ஐ.டி.எஃப். தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக ஐ.டி.எஃப். ஒற்றையர் பிரிவு தொடரை 9 முறை அங்கிதா ரெய்னா வென்றுள்ளார்.
இந்தத் தொடரின் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியிலும் அங்கிதா ரெய்னா - பிபியனி ஸ்கூஃப்ஸ் உடன் சேர்ந்து பட்டத்தைக் கைப்பற்றினார்.
மேலும் கான்பெரா டென்னிஸ் தொடரின் அரையிறுதி தொடர் வரை முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கோபத்த கொஞ்சம் கொறச்சுக்கோமா...!' - மகளுக்கு அறிவுரை கூறும் வார்னர்