ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் துபாயில் நடைபெறுகின்றன.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா - உக்ரைனின் கட்டரினா சவாட்ச்காவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அங்கிதா முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பின் நடைபெற்ற இரண்டாம் செட்டிற்கான ஆட்டத்தில் கட்டரினா 2-6 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றினார்.
பின்னர் ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அங்கிதா ரெய்னா 6-3 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி போட்டியை வென்றார்.
இதன்மூலம் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கட்டரினா சவாட்ச்காவை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச் சுற்றின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறிய பிவி சிந்து, சாய் பிரனீத்!