கெத்துக்காட்டிய சுமித் நாகல்:
ஆடவர்களுக்கான ஏ.டி.பி பியுனஸ் ஏர்ஸ் சாலஞ்சர் டென்னிஸ் போட்டி அர்ஜென்டினாவில் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் பங்கேற்றார். சமீபகாலமாக சிறப்பாக விளையாடிவரும் இவர், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜென்டினாவின் பகுன்டோ பாக்னிஸுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுமித் நாகல் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார். பின் நடைபெற்ற இரண்டாம் செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6-2 என்ற லாவகமாக அந்த செட்டை கைப்பற்றினார். இதன்மூலம், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று ஏ.டி.பி. பியுனஸ் ஏர்ஸ் சேலஞ்சர் பட்டத்தை வென்றார்.
தரவரிசையில் முன்னேற்றம்:
இந்த வெற்றியின் மூலம், சுமித் நாகல் ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் 26 இடங்கள் முன்னேறி 135ஆவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்றில் இவர், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரருடன் மோதிய பிறகு இந்திய ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 6 டாலர் தான் இருந்தது; கோலி இல்லை என்றால்? மனம் திறக்கும் சுமித் நகல்