துபாய்: ஐசிசி 7ஆவது டி20 உலகக்கோப்பைத் தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கியது.
தகுதிச்சுற்றுகள், சூப்பர் - 12 சுற்றுகள் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன.
இதையடுத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நேற்று (நவ. 14) நடைபெற்ற இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது.
தொடரின் சிறந்த வீரர்கள்
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் 12 சிறந்த வீரர்களை கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளின் வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
The @upstox Most Valuable Team of the Tournament has been announced 🌟
— T20 World Cup (@T20WorldCup) November 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Does your favourite player feature in the XI?
Read: https://t.co/PpfCbFDTSH pic.twitter.com/ucJn0cIs1c
">The @upstox Most Valuable Team of the Tournament has been announced 🌟
— T20 World Cup (@T20WorldCup) November 15, 2021
Does your favourite player feature in the XI?
Read: https://t.co/PpfCbFDTSH pic.twitter.com/ucJn0cIs1cThe @upstox Most Valuable Team of the Tournament has been announced 🌟
— T20 World Cup (@T20WorldCup) November 15, 2021
Does your favourite player feature in the XI?
Read: https://t.co/PpfCbFDTSH pic.twitter.com/ucJn0cIs1c
தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டேவிட் வார்னர், ஜாஸ் பட்லர், ஜோஷ் ஹசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஐசிசியின் அணியில் இடம்பெற்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்து, சூப்பர் - 12 சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி அணி
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
- ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து)
- பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)
- ஷரியத் அசலங்கா (இலங்கை)
- ஏடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா)
- மொயின் அலி (இங்கிலாந்து)
- வனிந்து ஹசரங்கா (இலங்கை)
- ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா)
- ஜாஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)
- டிரன்ட் பவுல்ட் (நியூசிலாந்து)
- அன்ரிச் நோர்க்கியா (தென் ஆப்பிரிக்கா)
- ஷாகின் அஃப்ரிடி (பாகிஸ்தான்) - 12ஆவது வீரர்
இதையும் படிங்க: T20 WC: பீர் ஊற்ற வேண்டிய இடமாடா அது... ஆஸி வீரர்கள் செய்த காரியம்!