ETV Bharat / sports

T20 WORLDCUP: தென் ஆப்பிரிக்கா வெற்றியால் அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - T20 WORLDCUP SEMI FINALS

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா குறைவான ரன்ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.

T20 WORLDCUP SEMI FINALS
T20 WORLDCUP SEMI FINALS
author img

By

Published : Nov 7, 2021, 8:01 AM IST

ஐக்கிய அரபு அமீரகம்: ஐசிசி ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பிரிவு அணிகளுக்கான சூப்பர்-12 சுற்றுப்போட்டிகள் நேற்றுடன் (நவ. 6) நிறைவடைந்தது.

முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மாலை அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது.

பிராவோ ஓய்வு

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 44 (31) ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

158 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. ஆஸி., அணிக்கு அதிகபட்சமாக வார்னர் 89 (56), மிட்செல் மார்ஷ் 53 (32) ரன்களை எடுத்தனர். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வுசெய்யப்பட்டார். நேற்றைய போட்டியோடு, மே.இ. தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் டூவைன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

வழிமேல் விழிவைத்திருந்த ஆஸி.,

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி, இரவு நடைபெற இருந்த இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தின் பந்துவீச்சை பதம் பார்த்தது.

டி காக் 36 (27), வான் டெர் ட்யூஸென் 94 (60), மார்க்ரம் 52 (25) என அதிரடியாக ரன்களை குவிக்க, தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது. மார்க்ரம், ட்யூஸென் ஜோடி இறுதிவரை களத்தில் இருந்து 103 ரன்களுக்கு பாட்னர்ஷிப் அமைத்தது. இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணிக்கு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றாலும், நேற்றைய போட்டியில் வெற்றி இரண்டாம்பட்சம்தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஏற்கெனவே எட்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்தன. இப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணியும் எட்டு புள்ளிகளை பெறும்.

இங்கிலாந்துக்கு 87; தென் ஆப்பிரிக்காவுக்கு 131

எனவே, அதிக ரன்ரேட் உள்ள அணிகள்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் கடுமையாக மோதின. மேலும், தென் ஆப்பிரிக்கா அணி, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற இங்கிலாந்து அணியை 131 ரன்களுக்குள் தடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இங்கிலாந்து அணிக்கோ, 87 ரன்கள் எடுத்தால் அடுத்த சுற்று என்ற நிலை ஏற்பட்டது.

எனவே, தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

பவர்பிளேயில் பவர் காட்டிய இங்கிலாந்து

ஜேசன் ராய் 20 ரன்கள் எடுத்தபோது, இடதுகால் தசைபிடிப்பு காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். மறுபுறம் அதிரடி காட்டி வந்த பட்லர் 26 (15) ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை எடுத்தது.

அடுத்த ஓவரை வீசிய ஷம்ஸி பேர்ஸ்டோவ்வின் விக்கெட்டை கைப்பற்ற, இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது. இருப்பினும், மொயின் அலி, டேவிட் மலான் இருவரும் பொறுப்புடன் ஆடியதால், 10.4 ஓவரிலேயே இங்கிலாந்து 87 ரன்களை எடுத்து, தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துவிட்டது. இனி, இரண்டாவது அணியாக தகுதிப்பெறப்போவது எந்த அணி என்பது மட்டும் உறுதியாக வேண்டும்.

ரபாடா ஹாட்ரிக்

பின்னர், மொயின் அலி 37 (27) ரன்களில் வெளியேற, இங்கிலாந்து 15 ஓவர்களில் 125 ரன்களை எடுத்தது. ரபாடா வீசிய அடுத்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில், மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம், லிவிங்ஸ்டன் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பையும் பறக்கவிட்டார். அவர் அடித்த இரண்டாவது சிக்ஸரால், இங்கிலாந்து அணி 137 ரன்களை எடுக்க, ஆஸ்திரேலியா அதிகாரபூர்வமாக அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

தொடரில் இருந்து வெளியேறிவிட்டாலும், தென் ஆப்பிரிக்கா கடைசிவரை உறுதியுடன் போராடியது. மலான் 33 (26), லிவிங்ஸ்டன் 28 (17) ரன்களுடன் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

20ஆவது ஓவரை ரபாடா வீச வந்தார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் முறையே வோக்ஸ், மார்கன், அடில் ரஷீத் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 போட்டிகளில் தனது முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தார். இதன்மூலம், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டும் எடுக்க, தென் ஆப்பிரிக்கா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தென் ஆப்பிரிக்கா வெளியேற்றம்

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஷம்ஸி, பிரிடோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வான் டெர் ட்யூஸென் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை தலா நான்கு வெற்றிகளுடன், எட்டு புள்ளிகளைப் பெற்றது. இருப்பினும், ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் பிரிவில் இருந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோலி பிறந்தநாளுக்கு ஸ்காட்லாந்தை விருந்தாக்கிய இந்திய அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.