நியூயார்க் : டிரிபிள் ஹெச்.,இன் ஒய்வு அறிவிப்பு WWE ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிரிபிள் ஹெச் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இதய நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொள்வதை தவிர்த்துவந்தார்.
Triple H இன் உண்மையான பெயர் ஏகேஏ பால் லெவெஸ்க்யூ (AKA Paul Levesque) ஆகும். 52 வயதான இவர் 1995ஆம் ஆண்டு WWE மல்யுத்த போட்டிகளில் அறிமுகமானார். 14 முறை WWE உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
இவருக்கு WWE ஆடுகளத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. சில நேரங்களில் இவர் பெண் ரசிகைகளுடன் சேட்டையில் ஈடுபடுவதும் உண்டு. டிரிபிள் ஹெச்,யும், ஷான் மைக்கிலும் இணைந்து ஆடும் ஆட்டம் எதிராளிக்கு கிலியை ஏற்படுத்திவிடும்.
கோபத்தின் உச்சத்திற்கு சென்றால் டிரிபிள் ஹெச், பெரிய சுத்தியால் எதிராளியை பதம் பார்த்துவிடுவார். இவ்வாறு மல்யுத்த போட்டிகளில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள டிரிபிள் ஹெச் திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “அன்றைய தினம் எனக்கு கடினமாக இருந்தது. நான் இதயப் பாதிப்பில் இருந்தேன். என்னை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க அனுப்பிவைத்தார். குடும்பத்துடன் வாழ்க்கையை வாழ நினைக்கிறேன். நம் குடும்பத்துக்கு நாம் தேவை. என் இதய பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மல்யுத்தம் பயிற்சிபெற்ற ஐந்தே மாதங்களில் வெள்ளி வென்ற தமிழ்நாடு வீரர்!