இந்தாண்டிற்கான உலகக்கோப்பை மல்யுத்த தொடர் அக்டோபர் 17ஆம் தேதிமுதல் செர்பியாவில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் தற்போது டிசம்பர் 12ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தேர்ச்சிபெறுவோர் மட்டும், தொடரில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், கரோனா சோதனையை மேற்கொண்டார். சோதனையின் முடிவில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து நரசிங் யாதவ் வருகிற டிச. 10ஆம் தேதி செர்பியாவிற்குச் செல்லவுள்ளார்.
மேலும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் உலகக்கோப்பை மல்யுத்த தொடரைப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவிற்குப் பதிலடி தருமா இந்தியா? - டி-20 போட்டி இன்று தொடக்கம்