கென்யா தலைநகர் நைரோபியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது.
இதில் இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 10,000 மீட்டர் நடைபயணப் போட்டியில் பங்கேற்ற அமித் காத்ரி போட்டி தூரத்தை 42 நிமிடம் 17.94 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கதை வென்றுள்ளார்.
கென்ய வீரர் ஹெரிஸ்டோன் 42 நிமிடம் 10.84 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
-
Medal Moment of #India at #WorldAthleticsU20
— Athletics Federation of India (@afiindia) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Amit Khatri, Silver Medal in 10,000m race walk, time 42:17.94 ✌🏻 pic.twitter.com/ilZDhVf8HK
">Medal Moment of #India at #WorldAthleticsU20
— Athletics Federation of India (@afiindia) August 21, 2021
Amit Khatri, Silver Medal in 10,000m race walk, time 42:17.94 ✌🏻 pic.twitter.com/ilZDhVf8HKMedal Moment of #India at #WorldAthleticsU20
— Athletics Federation of India (@afiindia) August 21, 2021
Amit Khatri, Silver Medal in 10,000m race walk, time 42:17.94 ✌🏻 pic.twitter.com/ilZDhVf8HK
20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இரு பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறை. ஏற்கனவே 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய கலப்பு அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் காத்ரியை 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் சேர்க்க அவரது பயிற்சியாளர் சந்தன் சிங் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரத்யேக கவனம் தரும் TOPS (Target Olympics Podium Scheme) திட்டத்தை இந்திய விளையாட்டு ஆணையம் 2014ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் உள்ள வீரர்களுக்கு பிரத்தியேக சிறப்பு பயிற்சியுடன் மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2021- புது லுக்கில் கலக்கும் தோனி