செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேட்டில் நடந்த 13வது உலக கராத்தே போட்டியில் 18 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் உள்பட இந்தியா சார்பாக 8 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மாணவ, மாணவிகள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி,ஒரு வெண்கலம் ஆகிய நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர். இன்று நாடு திரும்பிய அவர்களுக்கு சென்னை விமானநிலையத்தில் உறவினர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய தங்கம் வென்ற மாணவி, இந்திய நாட்டிற்காக விளையாடி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்னும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பது எங்களின் விருப்பம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஏற்கனவே நான் கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறேன்' - ரஹானே!