பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனை சரப்ஜித் கவுர் கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 34ஆவது மகளிருக்கான தேசிய அளவிலான பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 71 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
இப்போட்டியின் போது தேசிய ஊக்க மருந்து அமைப்பு ஊக்க மருந்து சோதனைக்காக அவரிடம் ரத்த, சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தது.
அந்த சோதனையில் அவர் டி ஹைடிராக்ஸி எல்-ஜி.-டி 4033 (Di-hydroxy-LGD-4033), செலக்டிவ் ஆண்ட்ரோஜன் ரெசிப்டர் மோடுலேஷனஸ் Selective Androgen Receptor Modulations (SARM), Ostarine (Enobosarm) உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதன் விளைவாக, தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான நாடா அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. முன்னதாக 2017 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பளுதூக்குதல் வீராங்கனை சீமா ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால் நாடா அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளின் பட்டியலை வெளியிட்ட வாடா