ETV Bharat / sports

காமன்வெல்த் 2022: இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜ் பூஜாரி வெண்கலம் பதக்கம் வென்று, இத்தொடரில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.

gururaj poojari
gururaj poojari
author img

By

Published : Jul 30, 2022, 8:45 PM IST

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஜூலை 29) தொடங்கியது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் மொத்தம் 205 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் ஆடவர் பளு தூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச்சுற்று இன்று (ஜூலை 30) நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி பங்கேற்றார்.

  • #CommonwealthGames | I'm elated. It's a good day, Sanket won silver & I won bronze - the 2nd medal for India. I could have done better. I had fallen ill recently but I recovered & gave my best. I dedicate my medal to my wife & thank all my supporters: Weightlifter Gururaj Poojary pic.twitter.com/hpl3bK66hi

    — ANI (@ANI) July 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்போட்டியில் குருராஜ், ஸ்னாட்ச் முறையில் 118 கிலோ பளுவையும், கிளீன் & ஜெர்க் முறையில் 151 கிலோ பளுவையும் தூக்கி மொத்தம் 268 கிலோவுடன் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

மலேசியாவின் அன்சில் பின் பிடின் முகமது 285 கிலோ பளுவை தூக்கி சாதனை படைத்தது மட்டுமல்லாமல் தங்கப் பதக்கத்தையும் வென்றார். அவரையடுத்து, பாப்புவா நியூ கினியா நாட்டின் மோரியா பாரு (273) வெள்ளி பதக்கத்தை பெற்றார்.

  • 2️⃣nd medal for 🇮🇳 at @birminghamcg22 🤩

    What a comback by P. Gururaja to bag 🥉 with a total lift of 269 Kg in the Men's 61kg Finals🏋‍♂️ at #B2022

    Snatch- 118kg
    Clean & Jerk- 151kg

    With this Gururaj wins his 2nd consecutive CWG medal 🙂

    Congratulations Champ!#Cheer4India pic.twitter.com/UtOJiShUvS

    — SAI Media (@Media_SAI) July 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வெண்கலம் வென்ற குருராஜ், 2018 காமன்வெல்த் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். மேலும், இன்றைய தினம் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் மட்டும் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. குருராஜ் பூஜாரிக்கு முன்பு, ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் சங்கேத் சர்கர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.

நேற்று தொடங்கிய காமன்வெல்த் தொடரில், இந்தியா இதுவரை 2 பதக்கங்களை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து ஜிம்னாஸ்டிக், பேட்மிண்டன், டேபிள் டென்னி்ஸ் ஆகிய போட்டிகளில் பதக்கங்களை குவிக்க காத்திருக்கிறது. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் இருந்து விலகியது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுதந்த சங்கேத் சர்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.