ETV Bharat / sports

படம் பாருங்க... பாட்டு கேளுங்க... ஆனா வீட்ல மட்டுமே இருங்க - ஹிமா தாஸ்! - கோவிட் -19 சமீபத்திய செய்திகள்

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Watch movie, listen to songs but stay inside: Hima Das urges fans

author img

By

Published : Mar 25, 2020, 8:18 PM IST

சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. 172 நாடுகளில் பரவியுள்ள இந்த கோவிட் -19 வைரஸ் தொற்றால் இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 606 பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் 11 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் இரண்டாம் நிலையில் உள்ள இந்த கோவிட் -19 வைரஸ் மூன்றாம் நிலையை எட்டிவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் இம்மாத இறுதிவரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொதுமக்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தாலே இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திவிடலாம் என்பதால் இதனை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த வரை செயல்பட்டு வருகின்றனர்.

  • Dear friends these are the testing times for all of us. Let’s follow the lockdown announced by our honourable Prime Minister @narendramodi ji. Let’s each one of us come together in the difficult times and contribute in the fight against Coronavirus by staying at home. pic.twitter.com/LVkSWIm6mK

    — Hima MON JAI (@HimaDas8) March 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்தவகையில், இந்திய தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் இது குறித்து வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "நமது பிரதமர் மோடி அறிவித்தபடி பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருங்கள். இந்த தருணத்தில் உங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள். திரைப்படத்தை பாருங்கள், பாடல்களை கேளுங்கள், பல்வேறு கலைகளை கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், இவையெல்லாம் வீட்டில் இருந்தபடியே செய்யுங்கள் என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா :ஹர்பஜன் சிங்கின் குட்டி ஸ்டோரி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.