சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான 'வாடா’ (WADA) கடந்த மாதம் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய நாட்டிற்கு, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு எந்த விதமான போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் வாடா தற்போது, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளின் மொத்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டுகள், பெப்டைட் ஹார்மோன்கள், வளர்ச்சிக் காரணிகள், எரித்ரோபோய்டின், பீட்டா-2 அகோனிஸ்டுகள், ஃபெனோடெரோல், ஃபார்மோடெரோல் போன்ற அனைத்து ஆப்டிகல் ஐசோமர்களும் அடங்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், இதில் உள்ள ஊக்கமருந்துகளின் அளவாக சால்ப்யுடாமால் 1000 என்ஜி/எம்எல் அல்லது ஃபோர்மெடரோலின் 40 என்ஜி/எம்எல் ஆக உபயோகித்திருந்தால் அது சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டியலில் அடங்காது எனவும் அதன் அளவு கூடுமாயின் அது ஊக்கமருந்து குற்றத்தில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப்பட்டியலில் தடைசெய்யப்பட்ட ஹார்மோன்கள், வளர்சிதை மாற்ற மாடுலேட்டர்கள், டையூரிடிக்ஸ் போன்ற வேதியியல் பொருள்கள் அல்லது உயிரியல் விளைவுகளைக் கொண்ட பிற பொருள்களைப் பயன்படுத்துதலும் தடைசெய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.
ரஷ்யா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டுத் துறைகளில், சர்ச்சைக்குரிய ஊக்கமருந்து திட்டங்களை நடத்தி மோசடியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2019 கிரிக்கெட்: சாதனைகளும்... வேதனைகளும்...!