ETV Bharat / sports

கோவையில் பார்முலா 4: சாம்பியன் பட்டத்தை வென்றார் சென்னை வீரர்! - கார் பந்தயத்தை வென்ற சென்னை வீரர் விஷ்ணு பிரசாத்

கோயம்புத்தூரில் நடைபெற்ற பார்முலா-4 கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கோவையில் பார்முலா 4, COIMBATORE FORMULA 4 CAR RACE
கோவையில் பார்முலா 4
author img

By

Published : Feb 28, 2022, 1:32 PM IST

Updated : Feb 28, 2022, 6:13 PM IST

கோயம்புத்தூர்: ஜேகே டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021இன் 4ஆவது சுற்றின் இறுதிப்போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது.

இதில் சென்னை, கோவை ,திருச்சூர், பெங்களூர், புனே, ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல போன்ற பகுதிகளில் இருந்து முன்னனி கார் பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நேற்று முன்தினம் (பிப். 26) தொடங்கிய நிலையில் நேற்று (பிப். 27) இறுதி போட்டி நடைபெற்றது.

COIMBATORE FORMULA 4 CAR RACE
கோவையில் பார்முலா 4

14ஆவது சாம்பியன் பட்டம்

பரபரப்பாக நடைபெற்ற எல்.ஜி.பி ஃபார்முலா-4 கார் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீரர்களும், தன் முன் செல்லும் வீரரின் காரினை முந்தும் முனைப்பில் வேகத்தை கூட்டிச்சீறிப்பாய்ந்தனர்.

முதல் சுற்று முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திய சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைபற்றினார். இது, விஷ்ணு பிரசாத்தின் 14ஆவது தேசிய பட்டமாகும். இரண்டாம் இடத்தை 59 புள்ளிகள் பெற்ற திருச்சூரைச் சேர்ந்த தில்ஜித் , மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த பாலாபிரசாத் பிடித்தனர்.

கோவையில் பார்முலா 4

பார்வையாளர்கள் இன்றி நடந்த போட்டிகள்

கடந்த இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளின் ஒட்டுமொத்த சாம்பியனாக 70 புள்ளிகள் பெற்ற விஷ்ணு பிரசாத் முதலிடத்தையும், 59 புள்ளிகள் பெற்ற தில்ஜித் இரண்டாம் இடத்தையும், 55 புள்ளிகள் பெற்ற ஆர்யா சிங் மற்றும் சந்தீப் குமார் மூன்றாம் இடம் பிடித்தனர்.

இதேபோல், ராயல் என்பீல்டு இருசக்கர வாகன போட்டியில் அல்வின் சேவியர் முதலிடத்தையும், மெகா விதுராஜ் இரண்டாம் இடத்தையும், அனிஷ் செட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கரோனா பாதுகாப்பு முறைகள் பின்பற்றபட்டு நடத்தபட்ட இந்த தேசிய அளவிலான நான்கு மற்றும் இருசக்கர வாகன போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது. இருப்பினும், போட்டியை சாலைகளில் நின்றபடியே ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இதையும் படிங்க: உலக புகழ்பெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து

Last Updated : Feb 28, 2022, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.