ETV Bharat / sports

மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்தம்: தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார் வினேஷ் போகத்! - டயானா வீக்கரை

மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்தத் தொடரின் மகளிர் 53கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

Vinesh Phogat clinches Gold, beats Diana Weicker

author img

By

Published : Mar 7, 2021, 3:06 PM IST

மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்தத் தொடர் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் வின்ஷ் போகத், கனடாவின் டயானா வீக்கரை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத், எதிரணி வீரங்கனைக்கு வாய்ப்புத் தராமல் புள்ளிகளை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் 4-0 என்ற புள்ளிக்கணக்கில் டயானா வீக்கரை வீழ்த்தி, மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

முன்னதாக கடந்த வாரம் உக்ரைன் நாட்டில் நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவிலும் வினேஷ் போகத் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.