ETV Bharat / sports

கொரோனாவால் தடை செய்யப்படுமா ஒலிம்பிக்? - ஜப்பானிய சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா வைரஸ் எதிரொலியாக நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க இருப்பதாக ஜப்பானிய சுகாதாரத்துறை அமைச்சர் கட்சுனோபு கடோ(Katsunobu Kato) தெரிவித்துள்ளார்.

Too early to talk of cancelling Olympics says, Japanese health minister

author img

By

Published : Feb 26, 2020, 5:44 PM IST

2020ஆம் ஆண்டு தொடக்கம் முதல் பல உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கி ஜப்பான், மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்டு பல உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் நடைபெறயிருந்த விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றம் செய்யப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன. அந்தவகையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரும் தடை செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கட்சுனோபு கடோ விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதனால் நாங்கள் தற்போதைய நிலை பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ எந்த திட்டமும் இல்லை என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளை தடையின்றி நடத்துவதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(ஐ.ஓ.சி) உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: விராட், ரோஹித்துக்கு வலை விரிக்கு டாம் - தங்களது பாணியில் பதிலளிப்பார்களா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.