டோக்கியோ ஒலிம்பிக்கின் 15ஆவது நாள் போட்டிகள் இன்று (ஆக.06) நடைபெற்றன.
அதில், கோல்ஃப் விளையாட்டில், மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் இரண்டாம் இடத்துடன் போட்டியை நிறைவு செய்து இந்தியாவின் அதிதி அசோக் அசத்தியுள்ளார். தொடர்ந்து, இறுதிச் சுற்று நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் நாளைய வானிலை மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவேளை போட்டிகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் தற்போது இரண்டாம் இடம் வகிக்கும் அதிதி வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இந்திய ஒலிம்பிக் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் இதுவரை விளையாடிய அனைத்து சுற்றுகளிலும் முதல் மூன்று இடங்களில் அதிதி இடம்பெற்றதால், பதக்கப் பட்டியலில் நிச்சயம் அவர் இடம்பிடிப்பார் என்ற நம்பிக்கையுடன் நாளைய போட்டியை எதிர்நோக்கி மக்கள் காத்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து கோல்ப் போட்டிக்குத் தேர்வான முதல் பெண் எனும் சாதனையை ஏற்கனவே அதிதி படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா